Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலை"கொலைக்கு எத்தனை வருடம் தண்டனை": கூகுளில் தேடிய பிறகே காதலனை கொலை செய்ய திட்டமிட்டரா?

    “கொலைக்கு எத்தனை வருடம் தண்டனை”: கூகுளில் தேடிய பிறகே காதலனை கொலை செய்ய திட்டமிட்டரா?

    காதலனை கொன்ற காதலி, ‘காவல்துறையினரிடம் சிக்காமல் கொலை செய்வது எப்படி?’ என கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது. 

    கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷரோன் கடந்த அக்டோபார் மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி ஷரோனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

    இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அவரது காதலி  கிரீஷ்மா ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக்கொள்ளவே, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையும் படிங்கமுன்னாடி.. பின்னாடி..? காரில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! மீறினால் கதை கந்தல்தான்

    கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை விசாரணைக்காக நெடுமன்காடு காவலநிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அந்த காவல் நிலையத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியைக் குடித்து , கீரிஷ்மா தற்கொலைக்கு  முயன்றுள்ளார். 

    இதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை காவல் துறையினர்  மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்நிலையில், கிரீஷ்மா செய்த திடுக்கிடும் செயல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. 

    காதலன் ஷரோனிற்கு பூச்சி மருந்தைக் கலந்து கொடுப்பதற்கு முன்னால், கூகுளில் காவல்துறையினரிடம் சிக்காமல் கொலை செய்வது எப்படி? எனவும்,  ஒருவேளை வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் கிரீஷ்மா தேடியது தெரியவந்துள்ளது. 

    இதையும் படிங்க: விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்? பேச்சுவார்த்தைக்கு சென்ற லோகேஷ் ‘விஜய் 67 அப்டேட்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....