Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை ! மகிழ்ச்சியில் வணிகர்கள்.. ஏமாற்றத்தில் சாமானியர்கள்..

    அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை ! மகிழ்ச்சியில் வணிகர்கள்.. ஏமாற்றத்தில் சாமானியர்கள்..

    சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 116 ரூபாய் குறைந்து 1,893 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயு பயன்பாடுகளுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

    சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து குறைத்து வருகின்றன. 

    இதன்படி சென்னையில் 2009 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 1893 ரூபாயாக குறைந்துள்ளது.  இந்த விலை குறைவு காரணமாக, வணிக பயணப்பாட்டுக்கான சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், தொடர்ந்து 6 மாதமாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  மேலும் இதன் விலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

    இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட்! ஸ்கேன் மையத்தை பூட்டி சென்ற ஊழியர்கள் மீது கடுப்பான தமிழிசை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....