Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்? பேச்சுவார்த்தைக்கு சென்ற லோகேஷ் 'விஜய் 67 அப்டேட்'

    விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்? பேச்சுவார்த்தைக்கு சென்ற லோகேஷ் ‘விஜய் 67 அப்டேட்’

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலை சந்தித்து விட்டு வந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விரைவில் ‘தளபதி 67’ படத்திற்காக இணையவுள்ளனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது. 

    இச்சூழலில்தான், ‘தளபதி 67’ திரைப்படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில் ‘தளபதி 67’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

    இந்நிலையில், ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஷால், விஜய் ரசிகர் என்பதாலும், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தின் மீது நல்ல அபிப்ராயத்தை அவர் வைத்துள்ளதாலும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் அவர் நடிக்க அதீத வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், தற்போது விஷால் நடித்துக்கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்று வந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இந்த காட்சியானது தளபதி 67 திரைப்படத்தில் விஷால் இருப்பதை உறுதிசெய்துள்ளது. 

    தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்க: மருத்துவ கல்வியில் முதல்முறையாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு தமிழில் பாடப்புத்தகங்கள்! டிசம்பரில் வெளியீடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....