Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழை ! எங்கு அதிகபட்ச மழை பதிவு தெரியுமா ?

    சென்னையில் இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழை ! எங்கு அதிகபட்ச மழை பதிவு தெரியுமா ?

    நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையில், சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. 

    தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை பதிவான மழை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, 

    சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கம் – 7.7 செ.மீ, நந்தனம் – 5.2 செ.மீ, பூந்தமல்லி – 4.5 செ.மீ மழையும், காரைக்கால் – 7.0 செ.மீ மழையும், நாகை – 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

    மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

    இதையும் படிங்க: இந்த வாரம்… ‘மழை வாரம்’ – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....