Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுன்னாடி.. பின்னாடி..? காரில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! மீறினால் கதை கந்தல்தான்

    முன்னாடி.. பின்னாடி..? காரில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! மீறினால் கதை கந்தல்தான்

    மும்பையில் இன்று முதல் காரின் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

    மராட்டியம் மாநிலம் தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 சக்கர வாகனங்களில் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று மும்பை காவல்துறை உத்தரவிட்டது. 

    இந்நிலையில், இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த உத்தரவுக்கு மும்பை 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இந்த வித்திலிருந்து டாக்சி ஓட்டுனர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். 

    காவல்துறை தரப்பில் இதற்கு,  4 சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் இல்லையென்றால், அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சமீபகாலமாகவே நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: மோர்பி பால விபத்து; விசாரணையை தொடங்குகிறதா உச்சநீதிமன்றம்..?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....