Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உண்மையான விடுதலை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை! முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

    உண்மையான விடுதலை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை! முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

    தினம் தினம் மன உளைச்சலில் உள்ளோம். புதுச்சேரி அரசின் நிர்வாக நிலைமை மோசம் அடைந்து வருகிறது. புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து ஒரே தீர்வு. உண்மையான விடுதலை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கத்துடன் பேசினார்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று போராடும் குழு ஒன்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மாநில அந்தஸ்தை பெற வலியுறுத்தி மனு அளித்தனர். உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி நேரு எம்எல்ஏ தலைமையில் சமூக அமைப்பினர் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினர். அதில் சிறப்பு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் அவர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நீங்கள் கொண்டு வந்த கோரிக்கையை மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித முடிவையும் அறிவிப்பையும் சொல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுகின்ற எங்களுக்குத் தான் எவ்வளவு சிரமம் என்று தெரியும் மக்கள் சிந்திப்பார்கள் உங்களுக்கு நாங்கள் வாக்களித்தோம் எங்களுக்கு திட்டங்கள் வழங்குவது உங்கள் கடமை என்று நினைப்பார்கள். எதுவும் செய்ய முடியாத சூழல் இங்கு நிலவுவது எங்களுக்குத் தான் தெரியும். தினம் தினம் மன உளைச்சலில் நாங்கள் உள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நீதிமன்ற வழக்குகள் மூலம் பிரச்சனைகளை நாடி புதுச்சேரிக்கு அதிகாரங்கள் இல்லை என தெளிவுபடுத்தி சென்று விட்டனர்.

    இன்று எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வதால் அதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வழி இல்லாமல் முடக்கம் ஏற்பட்டு புதுச்சேரி அரசின் நிர்வாக நிலைமை மோசம் அடைந்து வருகிறது. நாம் நினைத்த மாதிரி புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து ஒரே தீர்வு என்றும், உண்மையான விடுதலை புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்கவில்லை என மாநில அந்தஸ்திற்காக போராடும் குழுவிடம் ரங்கசாமி வலியுறுத்தி பேசினார்.

    மகா தீபக்காட்சி நிறைவு! திருவண்ணாமலை தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....