Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்மகா தீபக்காட்சி நிறைவு! திருவண்ணாமலை தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியது

    மகா தீபக்காட்சி நிறைவு! திருவண்ணாமலை தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியது

    திருவண்ணாமலையில் மகா தீபக்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றதன் காரணமாக தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்தத் திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான பரணி தீபம் 6 ஆம் தேதி அதிகாலையும், மகா தீபம் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 மலையின் மீது மாலை 6 மணிக்கும் ஏற்றப்பட்டது. 

    இந்நிலையில் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் புயல் வெயில் மழையிலும் சுடர்விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இந்த மகா தீபம் நேற்றுடன் எரிந்து நிறைவடைந்தது. 

    இதனைத்தொடர்ந்து இன்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரும் பணி தொடங்கியது. 

    இதையடுத்து, கோயிலில் தீப கொப்பரைக்கு சிற்பபு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுவது வழக்கம். மேலும் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தின்போது மகா தீப மை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு ‘தீப மை’ பிரசாதம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ‘விஜய், அஜித் என வித்தியாசம் பார்க்கமாட்டோம்’ – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....