Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம்' - வலியுறுத்திய திருநங்கை நீதிபதி..

    ‘திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம்’ – வலியுறுத்திய திருநங்கை நீதிபதி..

    அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மிகவும் அவசியமான ஒன்று என நீதிபதி ஜோயிதா தெரிவித்துள்ளார். 

    கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இஸ்லாம்பூர் மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாகர திருநங்கையான ஜோயிதா நியமிக்கப்பட்டார். நீதிபதி போன்ற உயர்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை என்ற பெயரை இவர் பெற்றார். 

    இந்நிலையில், அவ்வபோது சமூக சீர்திருத்தத்திற்காக குரல் கொடுத்து வரும் நீதிபதி ஜோயிதா அவர்கள் தற்போது சில வலியுறுத்தல்களை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தங்களது சமூக மக்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது: 

    தங்களது சமுதாய மக்களுக்கு என்று தங்கும் விடுதிகளை அரசுகள் உருவாக்க வேண்டும், நாட்டில் அதிகரித்துவரும் திருநங்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு உடனடியாக இந்த திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

    உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள், தங்கள் சமுதாய மக்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

    அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. எனக்கு வேலை இல்லையென்றால், யார் எனக்கு சாப்பாடு போடுவார்கள்? 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட்ஸ் – வெளிவந்த அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....