Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள்?

    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள்?

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    தமிழக பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

    முன்னதாக தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் வட்டம், மாவட்டம் அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளாமான மாணவர்கள் பங்கேற்று வந்தனர். மாநில அளவிலான போட்டிகள் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து கடந்த வாரம் முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டு உள்ளது. 

    இதன்படி, வருகிற 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில அளவிலான கலைத்திருவிழா தேதிகள் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    மகா தீபக்காட்சி நிறைவு! திருவண்ணாமலை தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....