Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஏர் இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு; தெரிஞ்சுக்கோங்க..பயன்பெறுங்க

    ஏர் இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு; தெரிஞ்சுக்கோங்க..பயன்பெறுங்க

    ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் வரும் ஒரு நிறுவனமாகும். 

    வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள் பிரிவில் 144 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு, ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு  வருகிற 12 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர் காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் கலந்துக்கொள்ளலாம். இந்தப் பணிகளுக்கு 14-11-2022 அன்று நடைபெறும். 

    அதேபோல, ஹேண்டிமேன் பிரிவில் 150 காலியிடங்கள் உள்ளன. இத்றகு தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15.11.2022 அன்று இப்பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும்.

    அனைத்து நேர்முகத் தேர்வுகளும் குறிப்பிடப்பட்ட தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். அதோடு,  ‘ஏச்ஆர்டி துறை அலுவலகம், ஏஐ யூனிட்டி வளாகம், பல்லாவரம், கன்டோன்மென்ட், சென்னை – 600 043.’ என்ற இடத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். 

    மேலும் விவரங்கள் அறிய www.aiasl.in , www.aiahl.in இணையதளத்தை அனுகலாம். 

    இதையும் படிங்கபோலி கணக்குகளுக்கும் ‘ப்ளூ டிக்’ ! எலான் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டரில் குளறுபடி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....