Friday, March 31, 2023
மேலும்
    Homeசமூக வலைதளம்பீஸ்ட் திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் மீது கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள்! காரணம் உள்ளே!

    பீஸ்ட் திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் மீது கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள்! காரணம் உள்ளே!

    பல இடங்களில் உலவும் முக்கிய பேச்சாக தற்போது இருப்பது, பீஸ்ட் திரைப்படம் குறித்துதான். ஆம்! நேர்மறையாக பீஸ்ட் திரைப்படத்திற்கு காத்திருந்த ரசிகர்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறை எண்ணங்கள் வளர ஆரம்பித்துவிட்டன. 

    அதிர்ச்சியாக இருப்பினும் இதுதான் தற்போதைய உண்மை நிலவரம். ஏப்ரல் பதிமூன்றாம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் சார்ந்தவைகள் பெரிதும் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.

    ஒரு மாதத்திற்கு முன்பு அரபிக்குத்து பாடலையும், ஒரு வாரத்திற்கு முன்பு ஜாலியோ ஜிம்கானா பாடலையும் வெளியிட்டதே இன்று வரை பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பெரும் விடயங்கள். 

    விஜய் படத்திற்கு என்றாலே பலரும் எதிர்ப்பார்க்கும் இசை வெளியீட்டு விழாவையும் படக்குழு இம்முறை இல்லையென்று கூறிவிட்டது. இசை வெளியீட்டு விழா நிகழும் என சிறிய நம்பிக்கையுடன் இருந்தவர்களும் தற்போது நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிட்டனர். 

    இசை வெளியீடுதான் இல்லை, பீஸ்ட் திரைப்படத்தின் டீசரையாவது வெளியிடுங்கள் என்ற ரசிகர்களின் தொடர்குரல் இணையத்தில் நிரம்பி வழிவதை நம்மால் எளிதில் காணமுடிகிறது. சமூக வலைத்தளங்களில் பதியப்படும் ரசிகர்களின் பதிவில் பீஸ்ட் அறிவிப்புகளுக்காக இருக்கும் ஏக்கத்தையும் விருப்பத்தையும் நன்கு உணர முடிகிறது. 

    டீசர் குறித்த ஆவலுடனும், ஏக்கத்துடனும், விருப்பத்துடனும் இருக்கும் ரசிகர்களை வருந்தச் செய்யும் செய்தியொன்று தற்போது வெளிவந்துள்ளது. அச்செய்தியின் படி பீஸ்ட் திரைப்படத்திற்கு டீசர் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

    தளபதி விஜய் திரைப்படங்களில் இருக்கும் அத்தனை அழகிய விடயங்களையும், தயாரிப்பு நிறுவனம் செய்யாமல் வருவதாக குறிப்பிட்டு வருகின்றனர், ரசிகர்கள். ரசிகர்கள் குறிப்பிடும்படிதான் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளும் இருந்து வருகிறது. 

    ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில்  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கலாய்த்தபடி பல்வேறு பதிவுகள் காணப்படுகின்றன. இப்படியான சூழலில் டீசர் இல்லை என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுசெய்து வருகின்றனர்.

    டீசர்தான் வெளிவராது ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை நிச்சயம் அடுத்த ஐந்து நாட்களுக்குள் படக்குழு வெளிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், டீசர் வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், விஜய் ரசிகர்கள்.

    வீ வாண்ட் பீஸ்ட் டீசர் என்ற ஹேஷ்டேக்குகளின் மூலம் ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் மீதான ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய, ஏக்கத்தை அகற்ற படக்குழு டீசர் வெளியிடும் என்று நம்புவதாக பலர் தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க; கில்லி திரைப்படத்தில் இப்படியொரு பாடல் இருக்கிறதா? பலரும் அறியாத அப்பாடல் குறித்த பார்வை இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...