Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக டி.ஆர்.பாலுவை பதில்களால் திணறடித்த நிர்மலா சீதாராமன் : உண்மை கசக்குதா ? நிர்மலாவின் பதில்

    திமுக டி.ஆர்.பாலுவை பதில்களால் திணறடித்த நிர்மலா சீதாராமன் : உண்மை கசக்குதா ? நிர்மலாவின் பதில்

    காங்கிரசின் ஆட்சியில்தான் கடன்களை வசூலிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நிர்மலா சீதாராமன். 

    டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இப்பொழுது பட்ஜெட் தொர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில் பட்ஜெட் விவாதத்தின் போது திமுகவைச் சேர்ந்த எம்.பியான டி.ஆர்.பாலு கடன்களை திருப்பி வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டி கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய நிதியமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் பதில் கூற ஆரம்பித்தார். 

    வங்கிகளில் கடன்களைப் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுபோன்ற கடன் வசூலிக்கும் நடவடிக்கைகளில் வங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஈடுபடவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக ஆட்சியில் தான் அதற்கான நடவடிக்கைள் நடைபெற்று வருகின்றன. 

    இதுவரை சுமார் 1000 கோடி ருபாய் வரை கடன் பொதுத்துறை வங்கிகள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு அரசியல் லாப நோக்கங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் தரப்பட்டது. ஆனால் அவற்றை அவர்கள் முறையாக வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 

    காங்கிரஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக கடன்களை வழங்கியது என்று கூறியதையும், அதனை முறையாக வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதையும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். அக்கட்சியின் லோக்சபா தலைவர் ரஞ்சன் குமார் சவுத்ரி இதனை வன்மையாக கண்டித்தார். 

    இதற்கு மீண்டும் எழுந்து நின்று பேசினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும், காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் லாபத்தை கருத்தில் கொண்டு தான் கடன்கள் வழங்கப்பட்டன என மீண்டும் அழுத்திக் கூறினார். 

    சிறுசேமிப்பு முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைப் பறித்து மோசடி செய்தவர்களின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடன் வழங்குவதற்கு அறிதிறன் பேசி செயலியை பயன்படுத்தி அதன் மூலம் கடன் வழங்குகிறோம் என்று தெரிவித்து வரும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....