Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையில் அரபிக்குத்து வர, திரையரங்கில் இரசிகர்கள் ஆர்ப்பரிப்பது உறுதி! - பீஸ்ட் ஸ்பெஷல்!

    திரையில் அரபிக்குத்து வர, திரையரங்கில் இரசிகர்கள் ஆர்ப்பரிப்பது உறுதி! – பீஸ்ட் ஸ்பெஷல்!

    பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீடு இன்னும் இரண்டு மாத கால இடைவெளி இருக்கையில் தற்போதென்று இல்லாமல், படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தில் இருந்து வருகிறது.

    beast_1

    பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொரு அறிவிப்பு வெளிவருகையிலும் உச்சம் என்று நாம் முன்பு கணித்து வைத்தது பொய்யாகும்படி எதிர்பார்ப்புகளின் வீரியம் அதிகரித்துவிதுகிறது.

    கடந்த சில வாரங்களாக அமைதியாய் இருந்த இணைய சமூகம், பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து வெளிவந்த அறிவிப்பில் இருந்து திருவிழாக்கோலம் பூண்டது. குறிப்பாக தளபதி விஜய் இரசிகர்களுக்கு திருவிழாதான் நேர்ந்து கொண்டிருக்கிறது.

    beast single

    பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்தான புரோமோ வெளியாகி தென்னிந்திய திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றது. நெல்சன் திலீப்குமார் அவர்களின் புரோமோ கலகல என இருக்க, அவற்றுள் சிவகார்த்திகேயன் இருக்க, தளபதி விஜய் அவர்களின் குரலும் பங்குபெற புரோமோ தாறுமாறாய் விஜய் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக, விஜய் அவர்கள் புரோமோவில் பேசியிருப்பது பலருக்கும் குதூகலத்தை தந்தது, தந்தும் வருகிறது.இந்த புரோமோவில் அரங்கேறியவை விஜய் இரசிகர்களுக்கு மட்டும் அல்லாது பலருக்கும் விருந்தாக அமைந்தது. 

    vijay

    இந்நிலையில், அப்புரோமோவில் கூறிய படியே இன்று அரபிக் குத்து பாடல் இணையத்தையும், பலரின் செவியையும் குதூகலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. பாடலின் லிரிக் வீடியோவில் இடம்பெறுள்ளவை மிகவும் கவனம் ஈர்ப்பதாகவே உள்ளது. பாடலில் தோன்றும் விஜய் மிகவும் ஸ்டைலிஷாக இருக்க, பூஜா ஹெக்டேவும் தன அழகால் வசீகரிக்கிறார். தளபதி விஜயின் நடனம் சொக்க வைக்கிறது. திரையரங்கில் இப்பாடலுக்கு இரசிகர்கள் ஆர்ப்பரிப்பது உறுதி என்றே தெரிகிறது. 

    beast

    அனிரூத் தன் இசையில் தன் குரலால் தெறிக்க, உடன் ஜோனிடா காந்தி பாட சிவகார்த்திகேயன் கலக்கல் ஆக கலோக்கியல் வரிகளை எழுதி இருக்கிறார். இளைஞர்கள் இனி இப்பாடலை தன்னையறியாமல் முனுமுனுப்பர் என்பதில் துளியும் மாற்றுக்கருத்து இல்லை!

    beast

    நண்பன் திரைபடத்தில் இடம்பெற்ற இருக்கானா பாடலைப்  போலவும், தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற ராங்கு ராங்கு பாடலை போலவும் அரபிக்குத்து காணொளி தெரிகிறது. விரைவில் இப்பாடலில் வரும் விஜயின் நடனம் போல பலராலும் நடனம் ஆடப்பட்டு அவை காணொளியாக இணையத்தை கலக்கும் என்பதில் துளியும் மாற்று கருத்து இல்லை.

    vijay

    அரபிக் குத்து பாடலைக்காண; https://www.youtube.com/watch?v=8FAUEv_E_xQ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....