Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்முதுகு தண்டுவடத்தை சரிசெய்யும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

    முதுகு தண்டுவடத்தை சரிசெய்யும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

    திசுக்களை மீளுருவாக்கம் செய்ய புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புரதங்களை உருவாக்கும் ரோபோட்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முதுகுத்தண்டுவட பிரச்சினைகளை எளிதில் சரிசெய்யலாம். 

    ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் குழு முதுகுதண்டுவடத்தில் திசுக்களை மீளுருவாக்கம் செய்யும் நொதியினை கண்டுபிடித்துள்ளது. இந்த சிகிச்சை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். 

    இதன் மூலம் புரதங்களை உருவாக்க முடியும். அதனை வைத்து சிதைந்த திசுக்களையும் குணப்படுத்த முடியும். இது முதுகு தண்டுவட நோயாளிகளிடம் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த திட்டத்தினைப் பற்றி இந்தத் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்த குழுவின் முதன்மை ஆய்வாளரும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரட்ஜர்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கின் உதவி பேராசிரியரான ஆடம் கோர்ம்லி பேசியுள்ளார். 

    இந்த ஆய்வு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் அதிக உணர்திறன் கொண்ட சிகிச்சை மூலம் புரதங்களை உருவாக்க முயற்சித்த முறைகளில்  இது முதல் முறை ஆகும். இந்த முறை மூலம் புரதங்களின் செயல்பாட்டையும் நீட்டிக்கலாம். இது ஒரு அறிவியல் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். 

    முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கொடூரமானவை. இதனால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை எதிர்மறையாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் இந்த பாதிப்பு ஒரு இரண்டாம் வீக்கத்துக்குக்குப்பின் நரம்பு திசு மீளுருவாக்கம் செய்வதைத் தடுக்கும் அல்லது தடுக்கக்கூடிய அடர்த்தியான திசுக்களை உருவாக்கும் என்று கூறியுள்ளார். 

    காண்ட்ராய்டிஸ் ஏபிசி வடு திசு மூலக்கூறுகளை சிதைத்து திசு மீளுருவாக்கம் செய்யும் நொதி வழக்கம். ஆனால் அந்த நொதியானது மனித வெப்பநிலையான 98.6 டிகிரி செல்ஷியசில் நிலையற்றதாகி சிலமணி நேரங்களில் செயலிழந்து உறைந்து போய்விடும். அதனை நிலைநிறுத்தி சிகிச்சை செய்ய விலை உயர்ந்த உட்செலுத்தல்கள் தேவை. 

    இவற்றை சரிசெய்ய செயற்கை கோபாலிமர்கள் போன்ற நொதிகள் தேவை. இதனை பயன்படுத்தி திரவ கையாளுதல் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உந்துதல் முறை மூலம் செய்லபடுத்தப்பட்டது எனக் கூறியுள்ளார் ஆய்வாளர் ஆடம் கோர்ம்லி .

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....