Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி விளம்பரம் கொடுப்ப? பாஸ்தா வேகாததற்கு 40 கோடி இழப்பீடு கேட்ட பெண்!

    இனி விளம்பரம் கொடுப்ப? பாஸ்தா வேகாததற்கு 40 கோடி இழப்பீடு கேட்ட பெண்!

    பாஸ்தா தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வதால், கிராப்ட் ஹெய்ன்ஸ் என்ற நிறுவனத்தின் மீது 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் அமண்டா ரமிரெஸ் என்ற பெண்மணி. இவர் அமெரிக்காவில் இருக்கும் உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் என்ற நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், பாஸ்தா தயாரிக்கும் பொழுது அது வெறும் 3.5 நிமிடத்தில் வெந்துவிடும் என்று அந்நிறுவனம் விளம்பரம் செய்ததாகவும், ஆனால் அதை வாங்கி சமைக்கும்போது அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

    மேலும் அந்த கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனத்திடம் 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளார். மேலும் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக அந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

    அதே சமயம் பாஸ்தாவை சேமிக்க தேவைப்படும் சரியான நேரம் குறித்து அந்த நிறுவனம் சரியாக பதிவிட்டிருந்தால், மக்கள் அந்த தயாரிப்புகளை வாங்கியிருக்க மாட்டார்கள் எனவும் அமண்டா ரமிரெஸ் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த புகார் மிகவும் அற்பமானது என்றும், இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

    என்னை பற்றி தந்தையிடம் புகார் செய்த எம் ஜி ஆர்; நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....