Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; நாக் அவுட் சுற்றில் போலந்து, அசத்திய அர்ஜென்டினா

    கால்பந்து உலகக் கோப்பை; நாக் அவுட் சுற்றில் போலந்து, அசத்திய அர்ஜென்டினா

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நாக் அவுட் சுற்றில் போலந்து, பிரான்ஸ் அணியுடனும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணியுடனும் மோத உள்ளது.

    உலகம் முழுவதும் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில், கால்பந்து முக்கியமான ஒன்று. அப்படியான கால்பந்து விளையாட்டின் திருவிழாதான் கால்பந்து உலகக் கோப்பை. இந்த கால்பந்து உலகக் கோப்பை தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. 

    இந்த போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் குரூப் சி அணியில் உள்ள அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகளும், சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ அணிகளும் மோதின. 

    அர்ஜென்டினா மற்றும் போலந்து

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் அர்ஜென்டினாவை சேர்ந்த அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 46-ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். 

    பின்னர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் 67-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். இறுதி வரை போராடிய போலந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

    சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ

    இந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மெக்சிகோ தனது முதல் கோலை 47-ஆவது நிமிடத்தில் அடித்தது. 52-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோலையும் அடித்து அசத்தியது. சவுதி அரேபியா அதீதமாக கொடுக்கப்பட்ட (90+5) 5வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இறுதியில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இருப்பினும் புள்ளி பட்டியலில் மெக்சிகோ பின்தங்கியுள்ளது. 

    இதன் மூலம் குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு இப்போதுதான் லீக் சுற்றில் இருந்து போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. 

    மேலும், நாக் அவுட் சுற்றில் போலந்து, பிரான்ஸ் அணியுடனும் ஆர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா அணியுடனும் மோத உள்ளது.

    கால்பந்து உலகக் கோப்பை; பதினாறு வருடங்களுக்குப் பிறகு தகுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....