Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; பதினாறு வருடங்களுக்குப் பிறகு தகுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா

    கால்பந்து உலகக் கோப்பை; பதினாறு வருடங்களுக்குப் பிறகு தகுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா

    2022-ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றிலிருந்து அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    கத்தாரில் நடப்பாண்டுக்கான சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குருப் டி யில் இடம்பெற்ற அணிகளும் போட்டியிட்டன. அதில், ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகளும், பிரான்ஸ் மற்றும் துனிசியா அணிகளும் களம்கண்டன. 

    ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க்

    ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. 

    ஆஸ்திரேலிய அணி சார்பில் 60-ஆவது நிமிடத்தில் டேனிஷ் பந்தை பாஸ் செய்ய, அதை லாவகமாக கோல் போஸ்ட்டிற்குள் மேத்யூ லேக்கி அடித்த கோலானது, அந்த அணியை வெற்றிபெறச் செய்தது. 

    இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. இதன் மூலம் 16 வருடங்களுக்குப் பிறகு அந்த அணி லீக் சுற்றுக்கு, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

    இந்தச் சுற்றில் அர்ஜெண்டினா அணியுடன் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது. 

    துனிசியா மற்றும் பிரான்ஸ்

    துனிசியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் யாரும் எதிர்பாரா விதமாக துனிசியா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 58-ஆவது நிமிடத்தில் துனிசியா அணி வீரர் வாபி காஸ்ரி அடித்த கோலால் துனிசியா வெற்றிப்பெற்றது. 

    இருப்பினும், துனிசியா அணி லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது. பிரான்ஸ் அணி முன்னதாகவே, அடுத்தச்சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புரோ கபடி: போராடியும் ‘டை’ ஆன தமிழ் தலைவாஸ்…வெற்றி பெற்ற ஜெய்பூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....