Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்; கண்டனம் தெரிவித்த ஐ.நா

    பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்; கண்டனம் தெரிவித்த ஐ.நா

    ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதற்கு, ஐநா மனித உரிமைகள் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கும், அந்நாட்டுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது, மேலும், ஆடைக்கட்டுப்பாடு, பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடு குறித்து ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    தலிபான் அதிகாரிகள் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்வியைத் தடுக்கின்றனர். இது சர்வதேச சீற்றத்தையும் ஆப்கானிஸ்தான் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டுவதாக அமைந்துள்ளது. 

    மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து பெண்களை விலக்குவதாக அவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் அனைத்து ஆப்கானியர்களின் துன்பத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் ஆபத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

    குளிர்காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 10 முக்கிய வழிமுறைகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....