Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் அதிபர் விடுத்த வேண்டுகோள்; உதவிக்கரம் நீட்டுமா ஆசிய நாடுகள்?

    உக்ரைன் அதிபர் விடுத்த வேண்டுகோள்; உதவிக்கரம் நீட்டுமா ஆசிய நாடுகள்?

    இன்று, உலக அரங்கில் கொரோனா வைரஸை அடுத்து, மிகவும் பரபரப்பாக பேசப்படுவது இரஷ்யா – உக்ரைன் போர் தான். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் போர்த் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைக் கண்டு ஆசிய நாடுகள் தனது எண்ணத்தை மாற்றி, உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் ஆசிய நாடுகள், தங்களின் நிலைப்பாட்டை கைவிட்டு, ஐரோப்பிய நாடுகள் போல உக்ரைனுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையை தகர்த்தெறிய, இரஷ்யா முயற்சிக்கிறது என்று உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கு தான் உக்ரைன் நாட்டு மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த இரு மாதங்களாக இரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், போர்ப் பதற்றம் எப்போது குறையும் என்று தெரியவில்லை.

    அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலரான பிளிங்கன் நேற்று உக்ரைன் சென்றார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியை கியூ நகரில் சந்தித்து பேசினார். இருவருக்குமான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் நிருபர்களிடம், உக்ரைனை கைப்பற்ற இரஷ்யா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைனுக்கு தேவையான கூடுதல் இராணுவ உதவியை அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று பிளிங்கன் கூறினார்.

    உக்ரைனில், இரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, அந்நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைனியர்களின் எண்ணிக்கை தற்போது 5,163,686 ஆக அதிகரித்துள்ளது என்று ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    தெரிஞ்சிக்கலாம் வாங்க; தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....