Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; 'மீட்பராக' இருப்பாரா உலகநாயகன்?

    தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?

    தமிழ் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக வெளிவரும் பெரிய நடிகர்களின் திரைப்படம் ரசிகர்களை சோர்வடையச் செய்து வருகிறது. அண்ணாத்த, பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன், மாறன் என உச்ச நடிகர்களின் திரைப்படங்கள், நம் ரசிகர்களை முழுவதுமாய் திருப்திசெய்ய தவறிவிட்டன.

    அதேசமயம், பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள், தமிழக ரசிகர்களை கவர்ந்த வண்ணம் வருகின்றன. குறிப்பாக, தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் , கன்னட திரைப்படமான கேஜிஎஃப் தமிழக ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

    இதனால், தமிழ் ரசிகர்களுக்கு முழுவதுமாய் திருப்திதரக்கூடிய திரைப்படத்தை தந்தாக வேண்டிய சூழலில் தமிழ் திரையுலகம் உள்ளது. அதன்படி, விரைவில் வெளிவர இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு திருப்தி தரக்கூடிய ஒன்றாக இருக்குமென்று பலரும் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர். 

    மாநகரம், கைதி, மாஸ்டர் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம்தான், விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமிழக ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். 

    திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்தே விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. வெளிவந்த டீசரும் விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழக ரசிகர்களின் சோர்வைப் போக்ககூடிய வகையில் விக்ரம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

    இப்படியான நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் விக்ரம் திரைப்படமானது வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இத்திரைப்படத்திற்கு புரோமஷன்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது ஆரம்பித்துவிட்டன.

    விக்ரம் திரைப்படத்தின் புரோமஷன்கள் பெரிய அளவில் இருக்கப்போகிறது என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாக, பெரிய நிகழ்வாக இசை வெளியீட்டு விழா இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் வந்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் இருக்கும் கமல், சென்னை திரும்பியதும் ‘விக்ரம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். துபாயில் பிரம்மாண்ட வெளியீடாக இருக்கப்போகிறது என்றும் அதை படக்குழு நேரடி ஒளிப்பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 

    எது எப்படியாக இருப்பினும், ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் திரையுலகத்தை மீட்கும் திரைப்படமாக இருக்கும் என்று நம்புகின்றனர். அப்படியாகவே, விக்ரம் திரைப்படம் இருக்கும் என்று நாமும் நம்புவோம்!

    இதையும் படிங்க; நயன்தாராவை ‘அடி அழகா சிரிச்ச முகமே ….’ என வருணித்த விக்னேஷ்சிவன் – ‘நான் பிழை’ பாடல் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....