Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்நயன்தாராவை 'அடி அழகா சிரிச்ச முகமே ....' என வருணித்த விக்னேஷ்சிவன் - 'நான் பிழை'...

    நயன்தாராவை ‘அடி அழகா சிரிச்ச முகமே ….’ என வருணித்த விக்னேஷ்சிவன் – ‘நான் பிழை’ பாடல் ஒரு பார்வை!

    ஒரு பாடலுக்கு இருக்கும் ‘உணர்வு கடத்தும்’ திறமை போல் வேறு எதற்கும் உணர்வு கடத்தும் திறமை இல்லை. காதல், நட்பு, காமம், உறவுகள், வலி, ஆனந்தம் என பல விதமான உணர்வுகளை நேர்த்தியாக எளிமையாக அனைவரையும் கேட்க வைக்கும்படியாக செய்வது பாடல்தான். குறிப்பாக காதல் உணர்வை பாடல்தான் மிகச்சிறப்பாக தெரியப்படுத்துகிறது. 

    அப்படியான காதல் உணர்வை, விக்னேஷ் சிவன் அவர்கள் எளிமையும் கவித்துவமும் சேர்ந்த வரிகளாக அனிருத் அவர்களின் இசையில் சேர்க்க, அந்த உணர்வை சிதைக்காமல், இன்னும் மெருகேற்றும் விதமாய்  ரவி மற்றும் சாஷா அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

    நான் பிழை, நீ மழலை…

    இப்பாடலில் தன்னை மழலை செய்யும் பிழையென்று கதாபாத்திரம் கூறுவது போல் செய்து, மழலையும் பிழையும் இயல்பு என்பதைத்தான் “நான் பிழை, நீ மழலை, எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை’’ என கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். 

    மற்ற நாட்களில் பெய்யும் மழைக்கும், பருவ மழை சமயங்களில் பெய்யும் மழைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. பருவ மழை காலங்களில், சிறு சிறு துளிகளுக்கு தருணம் மிக குறைவு. அதைத்தான் “நீ இலை, நான் பருவ மழை..சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை’’ என கூறி உன்னிடமே என்தன் முழு அன்பையும் மொத்தமாய் கொடுப்பதாய் கூறி வரிகளில் காதல் தழும்புகிறது.

    ஆழியில் இருந்து

    அலசி எடுத்தேனே

    அடைக்கலம் அமைக்க

    தகுந்தவன்தானே

    ராம்போவின் காதல் ததும்ப அதற்கு கண்மணி பதில்மொழியாய் ஆழியில் இருந்து ராம்போவை அலசி எடுத்தேன் எனவும், இணையாய் துணையாய் அடைக்கலம் அமைக்க இவன்தான் தகுந்தவன் எனவும் கூறுவது காதலின் பாய்ச்சல். 

    அடி அழகா சிரிச்ச முகமே

    நான் நினைச்சா தோணும் இடமே

    நான் பிறந்த தினமே

    கெடச்ச வரமே

    ராம்போ, மேல்வரியில் கூறுவதில் எவ்வளவு நம்பிக்கை தெரிகிறது, நான் பிறந்த உடனே கிடைச்ச வரம் நீயென்று கண்மணியை கூறுகிறான். இதில் இரு வேறு வகைககள் உள்ளன.

    நான் பிறக்கும்போதே எனக்காக நீயும் பிறந்து விட்டாய் என்ற ஒன்றும், நான் புதிய ஆளாய் மாறிய பின் கிடைத்த வரம் என்ற மற்றொன்றும் பொருள்படுவதாக தெரிகிறது. அழகாக சிரிக்கும் கண்மணியை ராம்போ எப்பவும் சிரிக்க வைக்க முயற்சிகள் எடுப்பார் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை.

    விழிகளின் வழியே பேசுவதை புரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஒரு பெருமிதம் உண்டு. குறிப்பாக காதல் செய்பவர்களுக்கு, அப்படி ஒன்றாய்தான்,  அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்..அவளை ரசிக்கும் ரசிகன் ஆனேன்’’  எனவும் ராம்போ பாட, “அவன் அருகினிலே ..கணல் மேல் பனிதுளி ஆனேன், அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்” என கண்மணி அவனுடனான தனது வாழ்வியலை தெரிவிக்கிறாள். 

    அவளோடிருக்கும்

    ஒரு வித சினேகிதன் ஆனேன்

    அவளுக்கு பிடித்த

    ஒருவகை சேவகன் ஆனேன்

    இப்படியாகத்தான் ராம்போ எனும் விஜய் சேதுபதி காதாப்பாத்திரம் கண்மணி எனும் நயன்தாராவுக்கு தன்னை தெரிவிப்பதாக விக்னேஷ் சிவன் தன் வரிகளின் மூலம் தெரிவிக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத் தனது இசையில் கொடுத்த சிறந்த மெலோடிப்பாடல் இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்து நிமிடம் மெல்லிய இசையோடு மென்மையாய் நாமும் இருக்கும் விதமாய் இப்பாடல் பலருக்கு அமைந்திருக்கிறது.

    இதையும் படியுங்கள்; நாம் காதலிப்பவரின் மனதில், நாம் என்னவாக இருக்கிறோம்? – “நீ கவிதைகளா” பாடல் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....