Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, போதுமான அளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து மறையும். தொழிலில் திருப்திகரமான லாபம் இருக்கும். அலுவலகத்தில் சுமூகமான நிலை உருவாகும். குழந்தைகள் உங்களை மகிழ்விப்பார்கள். சிலருக்கு பொறுப்பும் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடப்பதால் மனநிம்மதி அடைவீர்கள். 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, அதிகளவில் நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. சுபகாரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வெகு தூரத்தில் இருந்து நீங்கள் எதிர்ப்பார்த்த செய்திகள் வந்து சேரும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உங்களின் கடின உழைப்பால் வெற்றியடையக்கூடிய நாட்களாக, இந்த வார நாட்கள் உள்ளன. 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, அதிக நன்மைகளும் சில தீமைகளும் நடைபெறக் கூடியவைகளாக உள்ளன. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள், அவர்களே வந்து பேசுவார்கள். சக ஊழியர்களுடன் நட்பு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்ப்பார்த்த பணவரவு கிடைக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனுமுடன் இருப்பது நல்லது.   

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக இருக்கின்றன. கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மகர ராசிப்பெண்கள் தங்களின் திறமையை வைத்து சாதித்து காட்டுவார்கள். நிலம் வாங்க, நல்ல அனுகூலமான நாட்களாக உள்ளன. ஆன்மிக வழிபாடுகளில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளக் கூடிய தன்னம்பிக்கை தைரியம் உங்களிடம் இருக்கும். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்தவார நாட்கள் உங்களுக்கு, போதுமான அளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் வேலையின் மீது நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் அவர்களுக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்களை வாங்குவார்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் போதுமான அளவு வரவு இருக்கும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நாட்களாகவே உள்ளன. இருப்பினும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழிலில் தனவரவு இருக்கும். அலுவலங்களில் வேலைப் பளு அதிகரிக்கும். சிலருக்கு பணியிடமாற்றங்கள் ஏற்படும். 

    இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....