Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, மனநிறைவான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக இருக்கின்றன. ஆன்மிக வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தனலாபம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலர் சுறுசுறுப்புடன் செய்யப்பட்டால் உயர்ந்த இடத்தப் பெறுவர். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவி புரிவார்கள். நீங்கள், உங்கள் வேலையைச் சரியாக செய்தால் வெற்றிகள் குவியும். அலைச்சல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் நன்மைகளுக்காகவே நடைபெறும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மை தீமை இரண்டும் கலந்து நடக்கும் நாட்களாக உள்ளன. வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்பட வேண்டிய நாட்கள் இவை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கணவன் மனைவி உறவில் சிறிது பிரச்சனை வரலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வீடு மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, அதிகப்படியான நன்மைகளும் சில தீமைகளும் நடைபெறும் நாட்களாக உள்ளன. தொழிலில்  முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். இருப்பினும், செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை நன்கு யோசித்து எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். சிவன் வழிபாடு செய்வது மனநிறைவைத் தரும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாகவே உள்ளன. புதிய யுக்திகளை தவிர்த்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உங்களின் வாக்குகளால் உங்களுக்கு அதிகளவில் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். திருமண வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது திருமண காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். கணவன் மனைவி உறவில் அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்தவார நாட்கள் உங்களுக்கு, அதிக அளவு நன்மைகளும் சிறிது தீமைகளும் நடைபெறக் கூடிய நாட்களாக உள்ளன. கணவன் மனைவி உறவில் சிறிது சண்டைகள் வந்து மறையும். நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் வேலைகள் மிகத் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இதனால், அலுவலகத்தில் நற்பெயரும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய வியாபாரங்களுக்கான முயற்சியில் ஈடுபட உகந்த நாட்கள் இவை. 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே, இந்தவார நாட்கள் உங்களுக்கு, சற்று பொறுமையுடன் நடக்க வேண்டிய நாட்களாக உள்ளன. போதுமான அளவு பணவரவு கிடைக்கும். இருப்பினும் கடன் வாங்குவதை குறைப்பது நல்லது. மாணவர்கள், கவனம் கொண்டு படித்தால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமடைவார்கள். வேலை சுமை அதிகரிக்கும். இருப்பினும், அதற்கான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடு செய்வதின் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.

    இந்த வார ராசிபலன்கள் உங்களுக்கு நன்மையை அளிக்குமா? இங்கே பாருங்கள்…

    இதையும் படியுங்கள், சென்னையில் தடம்புரண்ட மின்சார இரயில்; பயணிகள் தப்பி ஓட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....