Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரில் ப்ளு டிக்கிற்கு எவ்வளவுதான் காசு? - சேட்டையுடன் பதிலளித்த எலான் மஸ்க்!

    ட்விட்டரில் ப்ளு டிக்கிற்கு எவ்வளவுதான் காசு? – சேட்டையுடன் பதிலளித்த எலான் மஸ்க்!

    ட்விட்டரில் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளு டிக்கிற்காக மாதம் ரூ.660 வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

    எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறார். ட்விட்டரின் தலைமை அதிகாரி உள்பட முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். 

    மேலும், ட்விட்டரில் அதிகார கணக்கு என்பதற்கான ப்ளு டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1600 வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. 

    முன்னதாக, ப்ளு டிக்கிற்கு மாதம் ரூ.400 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று மடங்கு அதிகமாக இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. 

    இந்நிலையில், ப்ளூ டிக் குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: மழையில் ஒழுகிய ‘அல்ட்ரா டீலக்ஸ்’ ! கடுப்பான பயணி ? நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

    மேலும், இந்த கட்டணமானது ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும் என்றும், அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்” என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    இதுமட்டுமல்லாது, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் இதுகுறித்து பதிவிட்டுள்ள புகைப்படம் காண்போரை கவர்ந்து வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....