Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புனித்தின் மரணத்திற்குப் பின் 'கர்நாடக ரத்னா' விருது: அடாத மழையிலும் விருதை வழங்கி கவுரவித்த அரசு..!

    புனித்தின் மரணத்திற்குப் பின் ‘கர்நாடக ரத்னா’ விருது: அடாத மழையிலும் விருதை வழங்கி கவுரவித்த அரசு..!

    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது வழங்கப்பட்டது.இந்த விருதினை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ரேவந்திடம் வழங்கினார்.

    அப்பு என்று அழைக்கப்படும் புனித்ராஜ்குமார் அவர்கள் நடிகர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ,என பன்முகங்களை கொண்டவர். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி அதிகாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு 46 வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்தார்.அவரது மரணம் கன்னட சினிமாவில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு கன்னடத் திரையுலகில் பலரின் இதயங்களை வென்று, ஒரு வலிமைவாய்ந்த நடிகராக வளம் வந்தவர்.

    இவர் நடிகராக மட்டுமில்லாது, சமூக உணர்வுமிக்க மனிதராகவும் தனது சிறப்பான பங்களிப்பை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு சென்றதால் ,அவரது ரசிகர்களும் , பொதுமக்களும் கர்நாடக அரசின் மிக உயரிய விருதான “கர்நாடக ரத்னா” விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களும், அம்மாநிலத்தின் உயரிய விருதான ‘கர்நாடகா ரத்னா’ விருதை நவம்பர் 1- ஆம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.அதன்படி கர்நாடக மாநிலம் விதான சவுதாவில் புனித்ராஜ்குமார் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ,தெலுங்கு திரையுலகில் இருந்து ஜூனியர் என்டிஆர் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மேலும் மறைந்த புனித்ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .

    இதையும் படிங்க: இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

    இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே திடீரென மழை பெய்ததால் விழா குறுகிப் போய், விறுவிறுப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களான ரஜினி, என்டிஆர், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புனித்ராஜ்குமார் குறித்து பேசிய பிறகு ,முழு வெள்ளிப் பலகை மற்றும் 50 கிராம் தங்கப் பதக்கம் அடங்கிய “கர்நாடக ரத்னா” விருதை மறைந்த நடிகரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாருக்கு அவரது சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார் மற்றும் பிற குடும்பத்தினர் முன்னிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி அவர்கள் ,எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் போன்ற மூத்த ஜாம்பவான்கள் 50 ஆண்டுகளில் செய்த சாதனையை புனித் 20 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அப்பு என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர் ,என்றுமே கடவுளின் குழந்தை ,அதனால்தான் சில காலம் நம்மோடு இருந்து, தன் திறைமையை காட்டிவிட்டு மீண்டும் கடவுளிடமே சென்றுவிட்டார் புனித்ராஜ்குமார் குறித்து பேசியிருந்தார்.

    இந்நிகழ்ச்சியில் திரையுலகம் மற்றும் இலக்கிய உலகின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புனித்ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உயரிய விருதான “கர்நாடக ரத்னா” விருது கடந்த 2009 ஆம் ஆண்டு டாக்டர் வீரேந்திர ஹெக்கடேவின் சமூக சேவைக்காக வழங்கப்பட்டது. அவரைத் தவிர, புனித்தின் தந்தை டாக்டர் ராஜ்குமார் 1992 ஆம் ஆண்டில் பொழுதுபோக்குத் துறையில் தனது பணிக்காக முதன்முதலாகப் பெற்றவர்களில் முதன்மையானவர்.இதுவரை 9 பேர் இந்த விருதை பெற்றுள்ள நிலையில் 10-வதாக கன்னடத் திரையுலகின் ஆதிக்க நட்சத்திரமாகக் கருதப்படும் புனித்திற்கு வழங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பம்! பிரபல ரவுடிகள் 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    மேலும் இந்த விருது வழங்கும் விழாவின் வீடியோவை கர்நாடக முதல்வர் தந்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....