Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'சபாஷ்' உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?

    ‘சபாஷ்’ உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?

    கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் செலுத்திய கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டுமென்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. 

    நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானிய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    இதன்படி, கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தையும் அவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அப்படி மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை திரும்பப் தராமல் விதிமீறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    குறிப்பாக உயர்கல்வி என்ற அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும் என அறிவுறுத்தியுள்ளது. 

    பல உயர்கல்வி நிறுவனங்களில் இடைநிற்கும் மாணவர்களுக்கு முறையாக சான்றிதழ்களும் அவர்கள் செலுத்திய கட்டணமும் திரும்ப கொடுப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: வங்கதேசத்துக்கு இலக்கை நிர்ணயம் செய்த இந்திய அணி; மீண்ட கே.எல்.ராகுல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....