Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேடப்படும் குற்றவாளிகள்; இலட்ச கணக்கில் சன்மானம் அறிவித்த என்.ஐ.ஏ

    தேடப்படும் குற்றவாளிகள்; இலட்ச கணக்கில் சன்மானம் அறிவித்த என்.ஐ.ஏ

    கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட பிரவின் நெட்டாரு வழக்கு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு என்,ஐ,ஏ சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

    கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தின் பாஜக செயலாளராக இருந்தவர் பிரவின் நெட்டாரு. இவரை கடந்த  ஜூலை மாதம் 26-ம் தேதி  தனது கடையை மூடிக்கொண்டிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் கோடாரி போன்ற ஆயுதங்களால் தாக்கினர். 

    இச்சம்பவத்தில், பலத்த காயமடைந்த பிரவின் நெட்டாரு-வை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து, பெல்லாரி காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரவின் நெட்டாருவின் கொலைக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு இந்த வழக்கானது என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நிகழ்ந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து, பிரவின் நெட்டாரு கொலை வழக்கில், முஸ்தஃபா, துஃபைல், உமர் ஃபாருக், அபுபக்கர் சித்திக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், இவர்கள் நால்வரும் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: வங்கதேசத்துக்கு இலக்கை நிர்ணயம் செய்த இந்திய அணி; மீண்ட கே.எல்.ராகுல்!

    மேலும்,இவர்கள் நால்வரும் சமீபத்தில் இந்தியா முழுவதும் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்தவர்கள் என்பதையும் என்,ஐ,ஏ தெரிவித்துள்ளது. தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், இவர்கள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், முஸ்தஃபா, துஃபைல், உமர் ஃபாருக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானத்தை  என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. 

    nia

    அதன்படி, முஸ்தஃபா மற்றும் துஃபைல் குறித்து தகவல் தருவோர்க்கு ரூபாய் 5 இலட்சம் ரொக்கமும், உமர் ஃபாருக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் குறித்து தகவல் தருவோர்க்கு ரூபாய் 2 இலட்சம் ரொக்கமும் தரப்படுமென்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....