Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்

    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்

    உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட அமைப்பு என்ற பெயருடன் முதலிடத்தை இந்திய பாதுகாப்பு துறை பெற்றுள்ளது.

    ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டேடிஸ்டா என்ற நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்ட அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    இந்நிலையில் இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்திய பாதுக்காப்பு அமைச்சகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்து 29.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு துறை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 25.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள சீனாவின் பாதுகாப்பு துறை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் பார்க்கும்பொழுது, வால்மார்ட் நிறுவனம் உலகளவில் 23 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக அமேசான் நிறுவனம் 16.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிறது. 

    கடந்த ஆண்டில் உலக அளவில் பார்க்கும்போது 2.1 லட்சம் கோடி டாலர்கள் ராணுவத்திற்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது. 

    குறிப்பாக அமேரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய 5 நாடுகள் ராணுவத்துக்காக அதிகம் செல்வம் செய்துள்ளன.  

    இதையும் படிங்க: ‘சபாஷ்’ உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பல்கலைக்கழக மானிய குழு! ஏன் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....