Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

    இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

    நியூசிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

    இப்பயணத்தில், நியூசிலாந்து அணி 3 இருபது ஓவர், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவானும், இருபது ஓவர் போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: 

    ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஷ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர், ஷபாஷ் அஹமது, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

    நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: 

    ஹார்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஷ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், மொஹமது சிராஜ், புவனேஷ்வர்குமார், உம்ரான் மாலிக்.

    இதையும் படிங்க: அறுந்து விழுந்தும் அடங்காத இளைஞர்கள்; தொங்கும் பாலத்தில் கார் ஓட்டி ரகளை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....