Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்ன டெக்னிக்கா? மணலை கடத்துறாங்க பாருங்க.. 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அட்டூழியம்

    என்ன டெக்னிக்கா? மணலை கடத்துறாங்க பாருங்க.. 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அட்டூழியம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பாடசாலை ஊராட்சியில் வழியாக கொசஸ்தலை ஆறு பாய்கிறது. 

    கனமழை பெய்து வருவதால், அங்கு வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. பிறகு, அப்போது நூறு நாள் வேலை பார்க்கும் பெண்கள் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர். 

    பருவமழை காரணமாக ஆற்றைத் தூர்வாரும் பணிகள் நடக்கிறது என கிராம மக்கள் நினைத்தனர். ஆனால், அது தான் அங்கு நடக்கவில்லை. 

    அந்தப் பகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றிப்பெற்ற திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மதினா என்பவரின் கணவர் உத்தரவின் பேரில், 100 நாள் வேலை திட்டத்தைச் சேர்ந்த 50 பெண்கள் அங்குள்ள மணலை அள்ளி மூட்டைகளில் நிரப்பியுள்ளனர். 

    ஊருக்குள் மண் எடுக்க வேண்டுமென்றால் தாசில்தார் முதல் வருவாய் வட்டாச்சியர் வரை அனைவரின் உத்தரவையும் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்நிலையில், எந்தவித அனுமதியும் இன்றி, அங்கு மண்ணை அள்ளுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனுமதி அளித்துள்ளார். 

    இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அங்கு வேலை செய்த பெண்களிடம் கேட்டதற்கு, தாங்கள் எதற்கு வந்தோம் என்றே தெரியாமல் வந்ததாக தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து கிராம மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் மாவட்ட ஆட்சியரின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....