Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்கு இலக்கை நிர்ணயம் செய்த இந்திய அணி; மீண்ட கே.எல்.ராகுல்!

    வங்கதேசத்துக்கு இலக்கை நிர்ணயம் செய்த இந்திய அணி; மீண்ட கே.எல்.ராகுல்!

    வங்கதேச அணிக்கு 185 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பையில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆட்டமானது மதியம் 1.30 மணியளவில் அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    இதன்படி, முதலில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களமிறங்கிய விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல நாட்களுக்கு பிறகு கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடியது ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை தந்தது. 

    கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷகிப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் விராட்கோலியுடன் இணைந்தார். இந்திய அணிக்கு ரன்கள் வேகமெடுக்க தொடங்கியது. ஆனால், 30 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சர் படேல் தலா 7 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தாலும், மறுபுறம் விராட் கோலி நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தற்போது 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. 

    இதையும் படிங்க: இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....