Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்; 4000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை

    துருக்கி நிலநடுக்கம்; 4000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை

    துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 4,890-ஆக உயர்ந்துள்ளது. 

    துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், சரியாக நேற்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. 

    மேலும், நேற்று ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்  தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன. 

    இந்த நிலநடுக்கத்தினால் 16 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதில் இதுவரை 4,890-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    மேலும், பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இச்சூழலில், துருக்கியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 

    ரோஸ் டே: சொல்லப்படும் காரணங்கள், ‘கிரிஞ்ச்’ என்ற கொல்லி… அனைத்தையும் மீறி பூக்கும் காதல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....