Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்வங்கிக்கு அபராதம், ஏர் இந்தியா நிறுவனம் செய்த தவறு - வர்த்தக துளிகள்!

    வங்கிக்கு அபராதம், ஏர் இந்தியா நிறுவனம் செய்த தவறு – வர்த்தக துளிகள்!

    ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமாகும். பயணிகள் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மற்றும் தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா நிறுவனம் வாங்கியது‌ குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு டாடா நிறுவனத்திற்கு விற்றது.

    ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.), 10 இலட்ச ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. செல்லதக்க பயணச்சீட்டு மற்றும் சரியான நேரத்தில் விமான நிலையத்தில் செக்-இன் இருந்தும், விமானத்தில் பயணிகளை ஏற்ற ஏர் இந்தியா மறுத்தது. இதற்காக, பயணிகளுக்கு இழப்பீடு வழங்காத காரணத்தால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் அபராதம் விதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியினுடைய விதிமுறைகளை மீறியதால், புடான் நகர கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 2 இலட்சம் அபராதம் விதித்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 36 இன் துணைப்பிரிவு (1) ஐ மீறிய காரணத்திற்காக, புடான் நகர கூட்டுறவு வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது.

    இரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இரஷ்யா மீதான பொருளாதார தடைகள் இருக்கும் வரை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 110 டாலருக்கு, அதாவது ஒரு பேரலுக்கு கீழ் குறைய வாய்ப்பில்லை. அதே நேரத்தில், 130 – 140 டாலராக உயர வாய்ப்புள்ளது எனவும், வந்தனா இன்சைட்ஸ் நிறுவனர் வந்தனா ஹரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா, கடந்த மே மாதத்தில் 5.14 இலட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்தது. இது அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தை விடவும், 10% குறைவு. கடந்த நடப்பாண்டு மாதத்தில் நம் நாட்டில் 5.72 இலட்சம் டன் பாமாயில் இறக்குமதியானது. உலக அளவில் பாமாயில் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கும் இந்தோனேஷியா, பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

    உங்கள் துணையிடம் குழப்பமான…….இந்த வார ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை இங்கே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....