Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்உங்கள் துணையிடம் குழப்பமான.......இந்த வார ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை இங்கே!

    உங்கள் துணையிடம் குழப்பமான…….இந்த வார ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை இங்கே!

    மேஷம்:

    வாரத்துவக்கத்தில் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். உங்களின் திடமான முயற்சி மூலம் உங்கள் பணியில் நல்ல பலன்கள் காண்பீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும். குடும்பத் தேவைக்காக பணம் செலவு செய்வீர்கள்.

    நீங்கள் உங்கள் துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்தப் போக்கினால் இருவரிடையேயான உறவின் ஸ்திரத்தன்மை மற்றும் இனிமை பாதிக்கும். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவம் உதவிகரமாக இருக்கும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக நீரைப் பருகவும்.

    ரிஷபம்:

    இந்த வாரம் சாதகமான பலன்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் நன்மை தரும் மாற்றங்கள் நிகழும். நீங்கள் உங்கள் வலிமையை உணர்வீர்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பு வெற்றி பெற்றுத் தரும். உங்கள் முயற்சிக்கான பாராட்டு பெறுவீர்கள்.

    நிதிநிலைமையில் சிறந்த வளர்ச்சி காணப்படும். கையிலுள்ள பணம் திருப்திகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். உங்களிடம் அதிக ஆற்றல் நிறைந்திருக்கும்.

    மிதுனம்:

    நீங்கள் கவலைப் படும் வகையில் சில குழப்பங்கள் எதிர் கொள்ள நேரும் என்றாலும், ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும்.உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் பணியின் இயல்பை விரிவுபடுத்தலாம். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படும்.

    உங்கள் கையிலிருக்கும் பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் அதிக ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும்.

    சிம்மம்:

    ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும். அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக நீங்கள் மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்கள் பணிகளில் சிறந்த பலன்களை காண இயலாது. உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.

    பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய விஷயத்தையும் நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இதனால் உறவில் இனிமை பாதிக்கப்படும். மிதமான ஆரோக்கியம் காணப்படும். கால்கள் மற்றும் தொடைகளில் வலி காணப்படலாம்.

    கடகம்:

    ஏழைகளுக்கு உணவு அளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் நன்மை பெறலாம். பிறருடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பிரார்த்தனை மூலம் மன அமைதி பெறலாம். நிதிநிலைமை போதிய அளவு காணப்படாது.

    பண இழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாக செலவு செய்ய வேண்டும். பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும். உறவில் இணக்கம் குறைந்து காணப்படும். கருத்து வேறுபாடு காரணமாக பெரியவர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் யோகா மேற்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

    கன்னி:

    நீங்கள் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். ஆனால், நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இயலாததைக் கூட சாத்தியமாக்கும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் பணிகளில் சிறப்பாக செயலாற்ற இயலும். நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களின் இந்தப் போக்கால் நீங்கள் நெருக்கமான உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள இயலும். நீங்கள் சுறுசுறுப்புடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

    உங்கள் துணையிடம் குழப்பமான…….இந்த வார ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை இங்கே!

    அமேசானில் ஆர்டர் செய்தால், இனி டெலிவரி பறந்து ட்ரோனில் வரும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....