Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்உங்கள் ஆரோக்கியம்.....இந்த வார ராசிபலன்கள் - துலாம் முதல் மீனம் வரையில் இங்கே!

    உங்கள் ஆரோக்கியம்…..இந்த வார ராசிபலன்கள் – துலாம் முதல் மீனம் வரையில் இங்கே!

    துலாம்:

    உங்கள் சுய வளரச்சிக்காக உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். பல வாய்ப்புகள் காணப்படும். சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலைமையில் முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களின் ஆதரவு உங்களுக்கு வழி காட்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

    விருச்சிகம்:

    உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கு முறையாக திட்டமிட வேண்டும். அதிக பணிகளால் கவலை கொள்வீர்கள். பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலாது. தேவையற்ற செலவுகள் காணப்படும். இதனால் உங்களிடம் கவலை காணப்படும்.

    உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்பட உணர்ச்சி வசப்படும் போக்கை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். தூக்கமின்மையால் பாதிக்கப்படுவீர்கள். இதனால் கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    தனுசு:

    எல்லா செயல்களையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் ஆற்றலை உணர்ந்து கொள்வீர்கள். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு கூடுவதற்கான வாய்ப்பு காணப்படும். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. சளி மற்றும் இருமல் பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    மகரம்:

    உங்கள் தொடர்பாடல் திறமை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிப்பை சிறப்பாக பராமரிக்கும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கும்பம்:

    குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவீர்கள். பதட்டம் நிறைந்து காணப்படும். இதனால் கவனமின்மை காணப்படும்.

    நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க இயலும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தகவல் தொடர்பாடலில் உள்ள பிரச்சனைகள் காரணமாக உங்கள் உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்களில் வலி காரணமாக அசௌகரியங்கள் காணப்படும்.

    மீனம்:

    உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். இதனால் உங்களின் பணிகளை எளிதாக முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. பணியில் சிறப்பாக செயலாற்ற வேண்டியது அவசியம்.

    நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. பண இழப்பு ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவு செய்வதனால் அவர்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

    உங்கள் துணையிடம் குழப்பமான…….இந்த வார ராசிபலன்கள்- மேஷம் முதல் கன்னி வரை இங்கே!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....