Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெளியாகிய தேர்வு முடிவுகள்.. பெருவாரியான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று சாதனை!!

    வெளியாகிய தேர்வு முடிவுகள்.. பெருவாரியான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று சாதனை!!

    தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

    மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பில் 8,06,277 மாணாக்கர்கள் எழுதினர். இதில் 4,21,622 மாணவிகளும், 3,84,655 மாணவர்களும் அடக்கம்.

    இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,998. கிட்டத்தட்ட 93.76 சதவீதத்தினர் தேர்வாகியுள்ளனர். மாணவிகளில் 4,06,105 (96.32%) பேரும், மாணவர்களில் 3,49,893 (90.06%) பேரும் தேர்வாகியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதுபோல பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9,12,062 பேர். இதில், 4,32,439 மாணவிகளும், 4,60,120 மாணவர்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் அடக்கம்.

    தேர்வு எழுதிய மாணவர்களில் 3,94,920 (85.83%) பேரும், மாணவிகளில் 4,27,073 (94.38%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 8.55 சதவீதம் மாணவிகள் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பன்னிரண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தில் 3,827 பேரும், கணக்கு பாடத்தில் 4,540 பேரும், வணிகவியல் பாடத்தில் 4,634 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    பாடவாரியாகப் பார்க்கையில், இயற்பியலில் 96.47 சதவீதத்தினரும், வேதியலில் 97.98 சதவீதத்தினரும், உயிரியலில் 98.89 சதவீதத்தினரும், கணிதத்தில் 97.29 சதவீதத்தினரும், தாவரவியலில் 95.34 சதவீதத்தினரும், விலங்கியலில் 96.01 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பன்னிரண்டாம் வகுப்பில் 97.95 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 97.27 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாமிடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் 97.02 சதவீதத்துடன் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

    பத்தாம் வகுப்பில் குமரி மாவட்டம் 97.22 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் 97.12 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும், 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளது.

    தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியர்களுக்குப் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றி தோல்வி மனப்பான்மை இருக்கக்கூடாது எனவும், உயர்கல்வி தொடர்பான சந்தேகங்கள், அச்ச உணர்வு உள்ளிட்டவைகளுக்கு மாணவர்கள் 14417 மற்றும், 1098 ஆகிய இலவச எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் தேர்வில் தோல்வியுற்றவருக்கான துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....