Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே இறுதி

    கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே இறுதி

    தமிழகத்தில் உள்ள கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று(ஜூலை 27) இறுதித்தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவு வெளிவந்ததில் இருந்து உயர் கல்லவியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாக தாமதம் ஆனது. 

    இதைத் தொடர்ந்து, பல்கலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    இந்நிலையில், ஜூலை 27-ம் தேதியாகிய இன்றுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகிறது. 

    மேலும், இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

    இதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாள்களாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் இன்று மாலையுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....