Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    மழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று (ஜூலை 26) 19 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று காலை 11 மணிக்கு, இரு அவைகளும் துவங்கியது. 

    மாநிலங்களவை தொடங்கிய முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும், மக்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 19 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

    இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்:

    திமுக:

    எம்.எம்.அப்துல்லா

    எஸ்.கல்யாணசுந்தரம்

    ஆர்.கிரிராஜன்

    என்.ஆர்.இளங்கோ

    எம்.சண்முகம்

    கனிமொழி

    திரிணாமுல் காங்கிரஸ்:

    சுஷ்மிதா தேவ்

    மௌசம் நூர்

    நதிமுல் ஹக்

    சாந்தா சேட்ரி

    டோலாசென்

    சான்டனு சென்

    அபி ரஞ்சன் பிஷ்வர்

    தெலுங்கனா ராஷ்ட்ர சமிதி:

    லிங்கய்யா யாதவ்

    ரவிஹாந்தரா வைத்திராஜு

    தாமோதர் ராவ்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

    பி.சந்தோஷ் குமார்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
    வி.சிவதாசன்

    ஏ.ஏ.ரஹீம்

    ஆகிய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தொடரில் மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் 45 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம்  செய்தார்.

    அதற்குப் பிறகு, அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

    நேற்று (ஜூலை 25) தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக மக்களவையைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 4 கோடி பேரம்- நான்கு பேர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....