Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 4 கோடி பேரம்- நான்கு பேர் கைது

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 4 கோடி பேரம்- நான்கு பேர் கைது

    நூறு கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.

    மத்திய புலனாய்வு துறை சமீபத்தில் 100 கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக நடைபெற்ற மோசடி குறித்து பல இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    மேலும், இந்தச் சோதனையின்போது ஒரு நபர் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பியோடியதாக தகவல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் அதிகாரிகளைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது ஆளுநர் பதவிகளுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதற்கான ஆதாரங்களும் தொலைபேசி உரையாடல்களும் சிக்கியுள்ளதாக மத்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. 

    மேலும், பதவிகள் பெற்றுத்தருவது தொடர்பாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற போது மராட்டியம், கர்நாடக மற்றும் தில்லியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கிளில் ஒருவர் தன்னை மத்திய புலனாய்வு துறை அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டு மிகப்பெரிய வழக்குகளை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் முடித்துக் கொடுப்பதாகக் கூறி பலரையும் ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    நோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....