Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாதவிடாய் நிறுத்தக் கொள்கை நடைமுறையில் இல்லை- ஸ்மிருதி இரானி

    மாதவிடாய் நிறுத்தக் கொள்கை நடைமுறையில் இல்லை- ஸ்மிருதி இரானி

    பெண்களுக்கான மெனோபாஸ் (menopause- மாதவிடாய் நிறுத்தம்) கொள்கை தற்போது மத்திய அரசிடம் இல்லை என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, ஜூலை 22-ம் தேதி மக்களவையில் விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை திமுக உறுப்பினரான ரவிக்குமார் கேள்வி எழுப்பினார், அப்போது அவர் கூறியதாவது: 

    அரசு மற்றும் தனியார் துறையில் மெனோபாஸ் (menopause- மாதவிடாய் நிறுத்தம்) கொள்கையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதா? அடுத்த ஆண்டுக்குள்ளாவது அத்தகைய கொள்கையை அமைச்சகம் வெளியிடுமா? அப்படி இருப்பின், அதற்கான விவரங்கள் வேண்டும் இல்லையெனில், அந்தக் கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்படும்? 

    மெனோபாஸ் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் செய்யப்பட்டிருக்கும் தற்போதைய ஏற்பாடுகள் என்ன? 

    இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்தக் கேள்விகளுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

    மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) என்பது பெண்களுக்குப் பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் நடக்கும் இயற்கையான நிகழ்வாகும். இந்த வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு எந்தவிதமான அடிப்படை காரணமும் இல்லாமல், ஓர் ஆண்டுக்கும் மேலாக மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் பொதுவாக மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. 

    மாதவிடாய் நிற்கும் நேரத்தில் சில பெண்களுக்கு லேசான பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கும். 

    தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission), மெனோபாஸ் பிரச்சனை உள்பட மக்களின் தேவைகளை நிறைவு செய்கிற அனைவருக்கும் சமமான, மலிவான மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கை எதுவும் நடைமுறையில் இல்லை.

    மெனோபாஸ் கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் மெனோபாஸ் காலத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்து ஆலோசித்து, இதைப்பற்றிய அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது. 

    மெனோபாஸ் உள்ளிட்ட பெண்களின் சுகாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாகவும், விளம்பரங்கள் அல்லது நாடகங்கள் மூலமாகவும் பெண்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது”

    இவ்வாறு, அவர் பதிலளித்தார்.

    நோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....