Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்கா: கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ

    அமெரிக்கா: கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் 6000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரிபோயோ மாவட்டம், மிட்பைன்ஸ் நகரம் யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி காட்டுத் தீ பரவத் தொடங்கியது. 

    இந்தக் காட்டுத் தீ மிகவும் வேகமாக 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரவியது. இது மிகப்பெரிய காட்டுத்தீயாக உருவெடுத்தது. தற்போது வரை இந்தக் காட்டுத்தீயை அணைக்கமுடியவில்லை.

    இதைத் தொடர்ந்து, இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 2,000க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயை தொடர்ந்து கலிப்போர்னியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளும் இந்த காட்டுத் தீக்கு இரையாகியது. இதனால், அந்தப் பகுதியில் வசித்து வந்த 6000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

    மேலும், இது கலிஃபோர்னியா மாகாணம் சந்தித்த மிக மோசமான காட்டுத் தீ சம்பவம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, கலிஃபோர்னியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அளவில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவின் தேசிய விலங்குக்கு நேர்ந்த அவலம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....