Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபன்றிக்காய்ச்சல்: கேரளத்தில் இதுவரை 190 பன்றிகள் கொலை

    பன்றிக்காய்ச்சல்: கேரளத்தில் இதுவரை 190 பன்றிகள் கொலை

    கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து, இரண்டு பண்ணைகளில் இதுவரை 190 பன்றிகள் கொல்லப்பட்டது.

    கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி ஊரின் பண்ணை ஒன்றில், பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, பண்ணைகளில் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, அந்தப் பண்ணைக்குச் சென்ற உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆய்வகத்துக்கு அனுப்பினர். 

    மேலும், போபாலில் உள்ள உயர் விலங்கு தேசிய நிறுவனத்திலும் உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்குள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மானந்தவாடிப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பன்றிகள் கொல்லப்படுவது தொடர்வதால், பன்றிக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அம்மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 25) அறிவித்துள்ளது. 

    மேலும், கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதையடுத்து, இரண்டு பண்ணைகளில் இதுவரை 190 பன்றிகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என்றும், மற்ற பகுதிகளில் உள்ள பண்ணைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க தேசிய நெறிமுறையின்படி பன்றிகள் கொல்லப்பட்டு வருவதாக மானந்தவாடி துணை ஆணையர் ஸ்ரீலட்சுமி தெரிவித்தார்.

    தலைநகர் தில்லியிலும் குரங்கம்மை பரவியது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....