Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமராட்டியத்தில் வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல்

    மராட்டியத்தில் வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல்

    மும்பையில் இதுவரை 62 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவின் தாக்கம் ஏற்கனவே இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மராட்டியத்தில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. பன்றிக்காய்ச்சல் குறித்து மராட்டிய பொது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 142 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    குறிப்பாக, மும்பையில் எச்.1.என்.1. பாதிப்புகள் 43 பேருக்கும், புனேவில் 23 பேருக்கும், பால்கர் பகுதியில் 22 பேருக்கும், மற்றும் நாசிக்கில் 17 பேருக்கும் ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல், நாக்பூர் மற்றும் கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவில் 7 பேர் மற்றும் கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

    மேலும், புனேவில் 2 பேர், கோலாப்பூரில் 3 பேர் மற்றும் தானே மாநகராட்சியில் 2 பேரும் என மொத்தம் 7 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். 

    இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம் மற்றும் கேரளாவில் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இந்திய தலைநகர் தில்லியிலும் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பன்றிக்காய்ச்சல்: கேரளத்தில் இதுவரை 190 பன்றிகள் கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....