Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் தேசிய விலங்குக்கு நேர்ந்த அவலம்!

    இந்தியாவின் தேசிய விலங்குக்கு நேர்ந்த அவலம்!

    இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 74 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை 15 வரை பதிவான புலிகள் இறப்பு குறித்த புள்ளி விவரங்களை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

    அந்த விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இந்தியாவில் 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை மொத்தமாக 74 புலிகள் இறந்துள்ளன. குறிப்பாக புலிகளின் மாநிலம் என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 27 புலிகள் இறந்துள்ளன. 

    மேலும், மத்திய பிரதேசம் தவிர மகாராஷ்டிரத்தில் 15, கர்நாடகத்தில் 11, அஸ்ஸாமில் 5, கேரளம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4, உத்தர பிரதேசத்தில் 3, ஆந்திரத்தில் 2, பிகார், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 1 என்ற எண்ணிக்கையில் புலிகளின் இறப்பு பதிவாகியிருக்கிறது.

    இந்நிலையில், புலிகளின் இறப்புக் காரணமாக புலிகளுக்கு இடையே நடக்கும் சண்டை, வயது மூப்பு, நோய்கள், வேட்டை, மின்வேலியில் சிக்குவது போன்றவை குறிப்பிடப்படுகின்றன. 

    முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. அங்கு 526 புலிகள் உள்ளன. கன்ஹா, பாந்தவ்கர், பென்ச், சத்புரா, பன்னா, சஞ்சய் துப்ரி போன்ற 6 புலிகளின் காப்பகங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளன.

    இந்த விவரங்கள் அனைத்தும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அஜய் துபே தெரிவித்துள்ளதாவது:

    புலிகளின் இருப்புதான், காட்டின் பரந்த மற்றும் வளமான சூற்றுச்சூழல் அமைப்புக்கு அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புலிகளின் இறப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

    மேலும், ‘புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் நோக்கில், புலிகள் பாதுகாப்பு சிறப்புப் படையை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டது. கர்நாடகம், ஒடிஸா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் சிறப்பு படையை அமைத்த நிலையில், மத்திய பிரதேசம் இதுவரை அமைக்கவில்லை . இதில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.

    புலிகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது மட்டுமன்றி, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள், மரங்களை வெட்டுதல் ஆகியவற்றை தடுப்பதும் சிறப்பு படையின் பணிகளே ஆகும். 

    கர்நாடகத்தில் கணிசமான எண்ணிக்கையில் புலிகள் உள்ள நிலையில், சிறப்புப் படை அமைக்கப்பட்டதால் அங்கு புலிகள் இறப்பு குறைவாக உள்ளது. 

    இவ்வாறு,வனவிலங்குகள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அஜய் துபே தெரிவித்துள்ளார். 

    மேலும், ‘புலிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது இறப்புகளும் அதிகம் இருப்பது இயல்புதான். மாநிலத்தில் புலிகள் வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’  என்று மத்திய பிரதேச மாநில வனப் பாதுகாப்பு தலைமைச் செயலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஸ்பெயினில் வரலாறு காணாத வெப்பம்- ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....