Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார ராசி பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    பொறுமையுடன் இருந்தால் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறலாம். பிரார்த்தனை நல்ல பலனைத்தரும். பணியில் வெற்றி காண்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பாராட்டைப் பெறுவீர்கள். வரவும் செலவும் இணைந்து காணப்படும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவில் நல்ல பிணைப்பு காணப்படும். தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இதனால் சிறந்த ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

    ரிஷபம்:

    சரியாக திட்டமிட்டால் நீங்கள் வெற்றி பெறலாம். உங்கள் அணுகுமுறையில் உறுதியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள். உங்களிடம் காணப்படும் நம்பிக்கையை பணியில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் சேமிப்பு உயரும். நீங்கள் உங்கள் துணைக்கென நேரம் ஒதுக்குவீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே உறவுப் பிணைப்பை வலுப்படுத்தும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். யோகா மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

    மிதுனம்:

    உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சிறப்புடன் செயலாற்ற மனதில் தெளிவு தேவை. உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். அவர்களிடமிருந்து தக்க சமயத்தில் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். அதன் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். நிதி விஷயங்களுக்கு சாதகமான நாள். உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நாள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை கழிப்பதன் மூலம் மன நிறைவைக் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உங்களிடம் மிகுந்த ஆற்றல் காணப்படும்.

    கடகம்:

    உங்கள் செயல்களை நன்கு ஆற்றுவீர்கள். நல்ல வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சக பணியாளர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள். அவர்களை கவனமுடன் கையாளுங்கள். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தேவைகளை சமாளிக்க போதுமான பணம் காணப்படும். உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள். இது உங்கள் துணையுடனான நல்லிணக்கத்தை மேம்படுத்த உதவும். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.

    சிம்மம்:

    உங்கள் முடிவுகளை செயலாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள், மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி விடுங்கள். உங்கள் முடிவுகளை, கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நன்மை தரும். உங்கள் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் காணப்படும் உற்சாகம் காரணமாக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். உங்கள் துணையை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.

    கன்னி:

    உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும். பணிச்சூழல் ஆக்கப்பூர்வமான பலன்களைத் தரும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.பண வரவு அதிகமாக காணப்படும் . உங்கள் சேமிப்பு உயரும். உங்கள் துணையுடன் அன்பை வெளிப்படுத்தி மகிழ சாத்தியம் உள்ளது. இதனால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....