Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்- துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார ராசி பலன்- துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    அமைதியாக இருந்தால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்வது ஆறுதலை அளிக்கும். குறித்த நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பீரகள். உங்களின் சிறப்பான செயல்திறன் மூலம்; உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.பண வரவு அதிகமாக காணப்படும். ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வகையில் அது கிடைக்கப் பெறலாம். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதனால் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். யோகா செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

    விருச்சிகம்:

    உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி கண்டு மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் பணியாற்றும் முறையில் உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் செய்த பணிக்காக நற்பெயர் பெறுவீர்கள். பணம் அதிக அளவில் காணப்படும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஆழ்ந்த திருப்தி உண்டாகும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இருவரும் பொருத்தமான ஜோடிகளாய் மகிழ்ச்சியையும் களிப்பையும் அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளுமின்றி முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

    தனுசு:

    ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும். பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியில் உங்கள் நேர்மை பாராட்டைப் பெரும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். பணம் அதிகம் பெறுவதற்கான அதிர்ஷ்டம் உள்ளது. கணிசமான தொகையை சேர்ப்பீர்கள். உங்கள் துணையுடனான நேர்மையான போக்கு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த நேர்மை சரியான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். உங்களிடம் காணப்படும் ஆன்மீக சக்திகளின் காரணமாக ஸ்திரமான ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்க முடியும்.

    மகரம்:

    அறிவுப்பூர்வமான அணுகுமுறையுடன் விஷயங்களை கையாள வேண்டும். வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்சியுடன் போராட வேண்டும். உங்கள் செயல்திறன் முலம் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அத்தியாவசியமான நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல அன்பு மலரும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். நன்றாக உண்டு உறங்குவதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    கும்பம்:

    நீங்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். சுய முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பணி நிமித்தமான பயணம் காணப்படும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்களிடம் அதிக பணம் காணப்படும். வெளி நாட்டிலிருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இனிமையான பேச்சு மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.அவரை விரும்ப ஆரம்பிப்பீர்கள். இது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சிறந்த ஆரோக்கியத்தை பாராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தை தக்க வைக்க சத்தான உணவை உண்ணவும்.

    மீனம்:

    உங்களுடைய உறுதியான முயற்சியினால் நீங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனஆற்றலும் நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் வெற்றி கிடைக்கும். சகபணியாளர்களிடம் நட்புமுறையில் பழகுவீர்கள். பணியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். பணத்தை சேமிக்கவும் இயலும். உங்கள் துணையுடனான பேச்சிலும் செயலிலும் இனிமை காணப்படும். இது உங்கள் உறவுப் பிணைப்பை வலுவாக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக காணப்படுவதால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

    இந்த வார ராசி பலன்- மேஷம் முதல் கன்னி வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....