Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன்- திரௌபதி முர்மு

    நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன்- திரௌபதி முர்மு

    இந்திய நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன் என  குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

    இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25) காலை 10 மணி அளவில் பதவி ஏற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

    இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற திரௌபதி முர்மு பேசியதாவது: 

    இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், ஆசைகள் மற்றும் உரிமைகளின் அடையாளமான இந்த புனிதமான நாடாளுமன்றத்தில் இருந்து அனைத்து சக குடிமக்களையும் நான் பணிவுடன் வாழ்த்துகிறேன். உங்கள் பாசம், நம்பிக்கை மற்றும் ஆதரவு, எனது செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். 

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் நான்தான். நமது சுதந்திரப் போராளிகள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

    ஒடிசாவில் உள்ள எனது கிராமத்திலிருந்து கல்லூரியில் படித்த முதல் பெண் நான். நாட்டின் குடியரசுத் தலைவரானது எனது தனிப்பட்ட சாதனையல்ல, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமின்றி, அந்த கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதற்கு எனது நியமனம் சான்றாகும்.

    தற்செயலாக, நாடு சுதந்திரம் அடைந்து 50-வது ஆண்டை கொண்டாடும் போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இப்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டில் இன்று எனக்கு புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.

    குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ க்ளுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. 

    நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பாக்கியம். சாதாரண சட்டமன்ற உறுப்பினராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம் ஆகும். 

    ஏழை வீட்டில் பிறந்த மகள் நான் குடியரசுத் தலைவராக முடியும் என்பது தான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோளாக இருக்கும். 

    தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....