Friday, March 15, 2024
மேலும்
    Homeஅறிவியல்நாசா வெளியிட்ட " சிரிக்கும் சூரியன் "...இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

    நாசா வெளியிட்ட ” சிரிக்கும் சூரியன் “…இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

    சூரியன் இந்த வாரம் நல்ல மனநிலையில் இருந்ததாலோ என்னவோ அது சிரிக்கும் முகத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    பிரபஞ்சங்களில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது நாசா புது புது தகவல்களை நமக்கு அளித்து வருகிறது.அதில் ஒன்றாக கடந்த புதன்கிழமை அன்று சூரியனில் இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியாக மற்றும் சிரிப்பது போன்று காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சன்,ஸ்பேஸ் ட்விட்டர் கணக்கில் “சே சீஸ்! என்று பகிரபட்டு உள்ள அந்த புகைப்படத்தில், சூரிய மேற்பரப்பில் சரியான இடங்களில் ,எதேச்சயாக கரோனல் துளைகள் உருவாகி சூரியன் சிரிப்பது போல் தோற்றமளிக்கிறது.

    மேலும் புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனின் இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும்” என்று நாசா ட்வீட்டில் பதிவிட்டுள்ளது .

    இதையும் படிங்க: ஐ.நா. அமைப்பின் அலுவலக மொழிகளில் ஒன்றாக ஹிந்தி…கடும் முயற்சியில் இந்தியா!

    சிரிக்கும் சூரியனின் இந்த படத்தைப் பல ஆயிரம் பார்வையாளர்கள் லைக் செய்து ஷேர் செய்வதோடு ,சிலர் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் ,அழகாகவும் ,தவழ்வது போன்று இருப்பதாகவும் தங்களது கருத்துகளை வீவேறு விதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    சிரிப்பது போல் தோன்றும் இந்த சூரியனால் தீவிர பாதிப்பு உண்டாகுமா?

    சிரிப்பதுபோல் தோன்றும் இந்த சூரியனால் நமது பிரபஞ்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெவ்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.அதன்படி கரோனல் துளைகள் எனப்படும் இந்த தற்செயலான நிலைப்பாட்டின் வழியாக சிக்கலான சூரியக்காற்றின் நீரோட்டத்திடை வெளியிட்டு ,அது நமது பிரபஞ்சத்தில் உடல்ரீதியிலான சிக்கல்களை மட்டுமல்லாமல் தீவிர சூரிய புயலை உண்டாக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    SpaceWeather.com கருத்துப்படி, சூரியன் மூன்று மடங்கு சூரியக் காற்றை பூமியை நோக்கி செலுத்துகிறது. இது சனிக்கிழமையன்று பூமியில் அரோராக்களை உருவாக்கக்கூடும் என்று இணையதளம் தெரிவித்துள்ளது.
    சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி என்பது பூமியைச் சுற்றி வரும் ஒரு செயற்கைக்கோள் ஆகும், சூரியன் மற்றும் சூரிய செயல்பாட்டின் பல்வேறு அளவீடுகளை எடுக்க சூரியனை நோக்கி சென்சார்கள் உள்ளன.

    சூரியனின் காந்தப்புலம் எவ்வாறு உருவாகிறது மற்றும் கட்டமைக்கப்படுகிறது, மேலும் அது பூமி மற்றும் நமது தொலைத்தொடர்பு அமைப்புகளில் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்ப்பது பணியின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

    சூரியப் புயல் என்றால் என்ன?

    சூரியப் புயல் என்பது சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் காற்று வெடித்து தீப்பிழம்பாக மாறி அதன் “எல்லிய அயனிச்செறிவு மண்டலம்” (Heliosphere) என்பதை தாண்டி பரவி, அதன் எல்லா கிரகங்களையும் பாதிக்கும் சூரிய சக்தி அலைகள் ஆகும்.இது மனிதர்களை எதிர்மறையாக பாதிக்காது.அதற்கு பதிலாக இந்த சூரியக் காற்று பூமியின் காந்த தடுப்பு வளையத்தையும் பாதிக்கும். அதனால் பூமியில் மின்சார தடைகள், இருட்டடிப்புகள், ஒலி, ஒளிபரப்பு அலைகள் அனைத்தையும் பாதிக்கும். அது விண்வெளி வீரர்களையும், பூமியில் உள்ள மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் அனைத்தையும் பாதிக்கும்.

    இதையும் படிங்கதிருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; புதுமண தம்பதிகளுக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....