Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; புதுமண தம்பதிகளுக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி

    திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; புதுமண தம்பதிகளுக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி

    சீனாவில் மக்கள் தொகையை பெருக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுமண தம்பதிகளை எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என அரசு கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    சீனாவைச் சேர்ந்த புதுமண தம்பதி ஒருவர் அந்நாட்டு அரசிடம் இருந்து தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய அந்த நபர், குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டதாகவும், சமூக வலைதளத்தில் பதிவிட அதற்கு பலரும் தங்களுக்கும் அது போன்ற அழைப்பு வந்ததாக கருத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

    மேலும் நஞ்சிங் மகளிர் சுகாதார சேவை மையத்திலிருந்து தன்னுடன் பணியாற்றும் ஊழியருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் புதிதாக திருமணமான பெண் கருவுற்றுள்ளாரா? என்று அரசு அதிகாரி கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அந்தப் பெண் இல்லை என்று பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த கேள்வி எதற்காக கேட்கப்படுகிறது என்று அந்தப் பெண் கேட்டதற்கு புதுமண தம்பதிகள் ஓராண்டுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர் புதிதாக திருமணமானவர்களை காலாண்டுக்கு ஒரு முறை நாங்கள் அழைத்து விவரங்களை கேட்போம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டிஆர்எஸ், பாஜக கட்சிகள் தேசத்துக்கு எதிரானவை- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    இது தொடர்பாக நஞ்சிங் நகராட்சியிடம் இருந்தும், தேசிய சுகாதார ஆணையத்திடமிருந்தும் இதுவரை எந்த பதில்களும் அளிக்கப்படவில்லை. மேலும் இந்த சமூக வலைதள பதிவுக்கு பலரும், தங்களுக்கும் இது போன்ற அழைப்புகள் வந்ததாக கருத்துக்கள் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பதிவுக்கு ஒருவர் கருத்தாக பதிவிட்டிருந்ததில், தனுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் இதுவரை இரண்டு முறை இது போன்ற அழைப்புகள் வந்துவிட்டதாகவும், முதல் முறை இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுமாறு பரிந்துரை செய்ததாகவும், பிறகு இரண்டாவது முறை அழைத்தபோது உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிறகு ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடவில்லை என்று கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

    மக்கள் தொகை பெருக்கத்தால் 1980 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சீனாவில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டில் பெரும் அளவு மனித வளம் பாதிக்கப்பட்டது.

    மேலும் நாட்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக அந்நாட்டின் குழந்தை பிறப்பு கடுமையாக சரிந்தது. ஏனெனில் மருத்துவமனைகளுக்கு செல்ல பயம்,  பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் தம்பதிகள் குழந்தை பேரை தள்ளிப் போடும் நிலைக்கு ஆளாகினர் இதன் காரணமாக சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கும் கொள்கைகள் வகுக்கப்பட்ட வருகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மறைந்த கன்னட நடிகர் புனித்திற்கு அரசின் உயரிய விருது: ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....