Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்மத்திய அமைச்சர் முன்பு பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய குமுறிய முதல்வர் ரங்கசாமி!

    மத்திய அமைச்சர் முன்பு பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய குமுறிய முதல்வர் ரங்கசாமி!

    புதுச்சேரி திட்டங்களுக்கு அனுமதி தருவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக மத்திய அமைச்சர் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி பாரதி பூங்காவில் மின் ஒளியில் ஆயி மண்டபம், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் பயணியர் வசதிகள் மற்றும் படித்துறை மேம்பாடு, திருநள்ளாரில் ஆன்மீக பூங்கா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு நீல கொடி தரச் சான்றிதழ் ஆகிய திட்டங்களை மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி துவக்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்துள்ளதாகவும், மேலும் நிதி வழங்க ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய சிறிய மாநிலம் சுற்றுலா வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது என்றும், சொந்த நிதி ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என கூறினார்.

    மேலும் வணிக வரித்துறை, கலால்துறை, பத்திரப்பதிவு துறைகள் மூலம் வருவாய் கிடைப்பதாகவும், இதுதவிர சுற்றுலா வளர்ச்சியின் மூலம் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு நிதியை முறையாக கொடுத்து, சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தில் சில நடைமுறை சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது என்றும், அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. சிலவற்றை தளர்த்தி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. எதை விரைவாக செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும் என கூறினார்.

    வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம் என்றும், நிர்வாகத்தில் சிறு, சிறு தடங்கல், காலதாமதம் ஏற்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்ட தேடலில் புதுவை முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரியது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். நட்சத்திர விடுதிகள் தேவை உள்ளது. இதற்கு அனுமதி கொடுப்பதில் சிக்கல் உள்ளது.

    புதுச்சேரியில் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை இருந்தால்தான் முதலீடு செய்ய வருவார்கள். பலர் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர். இந்நிலை மாறினால் புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். புதுவையை சிங்கப்பூர்போல மாற்ற முடியும். புதுச்சேரியில் விரைவான வளர்ச்சி வர வேண்டும் என பேசினார்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைதான மூவருக்கு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....